அமெரிக்கா: வாக்கர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு
Author: Sujatha | Posted Date : 06:15 (16/04/2018) A+       A-

அமெரிக்கா: வாக்கர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு

Apr 16


அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்  மனைவி பார்பரா புஷ்  உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்,  இவரது மனைவி பார்பரா புஷ் (92).  இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர். திருமதி புஷ்ஷின் மற்றொரு மகன் புளோரிடா மாகாணத்தின்  முன்னாள் கவர்னராக பதவி வகித்தவர்.   

பார்பரா புஷ், கடந்த சில ஆண்டுகளாக  தைராய்டு நோயால் அவதிப்பட்டுள்ளார் இதனால்  சமீபத்தில் தொடர்ச்சியாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியது :  உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என  பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.