உலகளவில் மக்கள் மனம் கவர்ந்தோர் பட்டியலில் பிரியங்கா சோப்ரா!
Author: Padmapriya | Posted Date : 02:49 (16/04/2018) A+       A-

உலகளவில் மக்கள் மனம் கவர்ந்தோர் பட்டியலில் பிரியங்கா சோப்ரா!

Apr 16

உலக அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு ஒன்று நடந்தது. இதில், நடிகை பிரியாங்கா சோப்ரா 12-வது இடத்தில் உள்ளார்.

உலக அளவில் மக்களை கவர்ந்த 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் பட்டியலிடப்பட்டதில், முதல் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸும் பெண்கள் பிரிவில் நடிகை ஏஞ்சலினா ஜோலியும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும்தான் கடந்த வருடமும் முதல் இடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அவரைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2-வது இடத்திலும் நடிகர் ஜாக்கி சான், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்திலும் உள்ளனர்.


பெண்கள் பிரிவில் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்தபடியாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா மற்றும் ஒப்ரா வின்பிரே ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பெற்றுள்ளனர்.

ஹிலாரி கிளிண்டன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரும் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த யூகோவ் என்ற டேட்டா ஆனலிஸிஸ் நிறுவனம் 37 நாடுகளில் சுமார் 40,000 பேரிடம் எடுத்த கருத்துக்கணிப்பை அடுத்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.