அழகு சாதனப் பொருட்களில் மனிதக் கழிவுகள்: அமெரிக்காவில் 6 பேர் கைது
Author: Padmapriya | Posted Date : 02:55 (16/04/2018) A+       A-

அழகு சாதனப் பொருட்களில் மனிதக் கழிவுகள்: அமெரிக்காவில் 6 பேர் கைது

Apr 16

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விற்பனை செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் மனித மற்றும் விலங்குக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (Bootleg) என்ற பிரபல அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது.  இந்த நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு தோல் சார்ந்த பிரச்னை ஏற்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தன. 

இதனால் போலீசார் ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று சென்று, மலிவு விலையில் விற்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கி சோதித்தனர். அதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித, விலங்கு கழிவுகளும் இருப்பதை கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அதன் 21 கிளை கடைகளிலிருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 கோடி மதிப்பிலான அழகு சாதன பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்த மோசடி குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், சில இடங்களிலும் சோதனைத் தொடர்கிறது.