இனி எல்லாருடைய மொபைலிலும் கூகுள் லென்ஸ்! என்ன செய்யலாம்?
Author: Ishwarya G | Posted Date : 02:43 (09/03/2018) A+       A-

இனி எல்லாருடைய மொபைலிலும் கூகுள் லென்ஸ்! என்ன செய்யலாம்?

Mar 09


புகைப்படங்கள் மூலம் தகவல் அறியும் கூகுள் லென்ஸ் வசதி அனைத்து மொபைல்களுக்கும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய கூகுள் ஐ/ஓ (Google I/O) நிகழ்வில் எதிர்வரும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிமுகம் செய்தது. இதில் கூகுள் அஸிஸ்டெண்ட் (Google Assistant), கூகுள் லென்ஸ் (Google Lens) ஆகியவை முக்கியமானதாகும். கூகுள் அஸிஸ்டெண்ட் ஆப் வெளியாகி இளைஞர்களை பெருமளவில் ஈர்த்தது. 

இதையடுத்து, வெளியிடப்பட்டது கூகுள் லென்ஸ். கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கூகுள் லென்ஸ், பிக்ஸல் மொபைல்களில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த வசதி அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் லென்ஸ் என்பது புகைப்படங்கள் மூலம் தகவல்களைப் பெறும் நவீனத் தொழில்நுட்பமாகும். செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த செயலி வாயிலாக எந்தவொரு புகைப்படத்தை கொடுத்து தகவல்களை பெறலாம். உதாரணமாக, அறிய விலங்கு புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால் அந்தப் விலங்கை குறித்த முழு தகவல்களும் திரையில் தோன்றும். ஒரு நபரின் புகைப்படம் என்றால், அவர் யார் என்பதை கூகுள் லென்ஸ் தெரிவிக்கும்.

கூகுள் போட்டோஸ் (Google Photos) அப்ளிகேஷனின் புதிய அப்டேட் உடன் கூகுள் லென்ஸ் வசதியும் கிடைக்கும். கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனில் ஒவ்வொரு போட்டோவிற்கான ஆப்ஷன்களிலும் கூகுள் லென்ஸ் ஐகான் இருக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட போட்டோவில் உள்ளதைப் பற்றிய தகவலை அறியலாம். தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு மட்டும் நடைமுறைக்கு வந்த இந்த வசதி விரைவில் ஐபோன்களில் கிடைக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஆண்ட்ராய்ட் சார்ந்த முன்னணி பிராண்டுகளான சாம்சங், ஹவாய், எல்ஜி, மோட்டோரோலா, சோனி, மற்றும் எச்எம்டி குளோபல், நோக்கியா போன்ற மொபைல்களில் கூகுள் லென்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


RELATED STORIES