டி20 தொடர்: இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து
Author: Nandini | Posted Date : 04:56 (13/02/2018) A+       A-

டி20 தொடர்: இங்கிலாந்தை வென்றது நியூசிலாந்து

Feb 13


ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள டி20 முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த 4-வது போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் சேர்த்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 184 ரன் மட்டுமே எடுத்ததால், 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. வரும் 16ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற இருக்கும் 5-வது ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன.