டி20ல் ஹிட் விக்கெட்டான முதல் இந்திய வீரரானார் கே.எல். ராகுல்
Posted Date : 12:23 (13/03/2018) A+       A-

டி20ல் ஹிட் விக்கெட்டான முதல் இந்திய வீரரானார் கே.எல். ராகுல்

Mar 13


நிடாஹஸ் ட்ராஃபிக்கான டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை உள்பட இந்தியா, வங்கதேச அணிகள் பங்கேற்றுள்ளது. நேற்று இத்தொடரின் நான்காவது போட்டி நடந்தது. அதில், இலங்கை- இந்தியா அணிகள் மோதின. போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழந்து 152 ரன் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு பதில் ராகுல் சேர்க்கப்பட்டிருந்தார். போட்டியில் 18 ரன் எடுத்திருந்த நிலையில், இலங்கை வீரர் ஜீவன் மெண்டிஸ் வீசிய அடுத்த பந்தை எதிர்கொள்ள ராகுல் பின்பக்கம் சென்றார். ஆனால், அவரது கால் ஸ்டம்பில் பட்டதால், ஹிட் விக்கெட் ஆனார்.   

இதன் மூலம், டி20 போட்டியில் ஹிட் விக்கெட் ஆன முதல் இந்திய வீரரானார் ராகுல். சர்வதேச அளவில் 10-வது வீரரானார். ஏபி டி வில்லியர்ஸ், மிஸ்பா உல்-ஹக், முகமது ஹபீஸ், சண்டிமல் உள்பட 9 பேர் இப்பட்டியலில் உள்ளனர். 

1949ம் ஆண்டு இந்தியாவின் லாலா அமர்நாத் டெஸ்ட் போட்டியிலும், 1995ம் ஆண்டு நயன் மோங்கியா ஒருநாள் போட்டியிலும் ஹிட் விக்கெட் ஆன முதல் இந்திய வீரர்களாக இருந்தனர்.