ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் பயிற்சியாளரானார் அமோல் முஸம்தர்
Posted Date : 05:25 (13/03/2018) A+       A-

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் பயிற்சியாளரானார் அமோல் முஸம்தர்

Mar 13


இந்தியாவின் உள்ளூர் பேட்டிங் லெஜெண்ட் அமோல் முஸம்தர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இன்று நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 11-வது ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகின்றது. ஏப்ரல் 9ம் தேதி ராஜஸ்தான் அணி, தனது முதல் போட்டியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் ஸுபின் பருச்சா, பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுட்டுட்டே, ஆலோசகர் ஷேன் வார்னேவுடன், பேட்டிங் பயிற்சியாளராக முஸம்தர் இணைந்துள்ளார். 

மும்பை, அசாம், ஆந்திரா போன்ற உள்ளூர் அணிகளில் விளையாடியுள்ள முஸம்தர், ரஞ்சி ட்ராஃபி போட்டியில் இரண்டாவது அதிக ரன் குவித்தவர். முதல்தர போட்டியில் 11,167 ரன், 40 சதம், 60 அரைசதம் எடுத்துள்ளார். அவரது சராசரி 48.13. கடைசியாக 2013-14 சீசனுக்கான முதல்தர போட்டியில் ஆந்திரா அணிக்காக விளையாடியிருந்தார்.