உமேஷ் யாதவின் மோசமான சாதனை
Author: Newstm Desk | Posted Date : 07:35 (16/04/2018) A+       A-

உமேஷ் யாதவின் மோசமான சாதனை

Apr 16

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அதிக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த மோசமான சாதனையை செய்துள்ளார். 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியால் 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இந்த போட்டியில் பெங்களூரு அணியின் உமேஷ் யாதவின் பந்துவீச்சை ராஜஸ்தான் வீரர்கள் பதம்பார்த்தனர். அவர் வீசிய 4 ஓவர்களில் 59 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. 

ஒரு போட்டியில் பந்துவீசி எதிரணிக்கு 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது உமேஷ் யாதவுக்கு முதன் முறையல்ல. நேற்றைய போட்டியையும் சேர்த்து 5 முறை இது போன்று பந்துவீசி உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை உமேஷ் யாதவ் செய்துள்ளார். 

இதற்கு முன்பு 4 முறை 50 ரன்களை விட்டுக்கொடுத்த அசோக் திண்டா இந்த சாதனைக்கு சொந்தகாரராக இருந்தார்.