Aug
18

இரு தினங்களுக்கு கன மழை ...
Author: sujatha | Posted Date : 05:46 (18/08/2017)A+       A-

இரு தினங்களுக்கு கன மழை ...

Aug 18
heavy-rain-in-chennai , இரு தினங்களுக்கு கன மழை ...

சென்னையில் கடந்த சில நாட்களாகப் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை சென்னையில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இது குறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது: "தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தென் மாநிலங்களில், ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், வங்கக் கடலில், சென்னை - நெல்லுார் இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், இரு நாட்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை மையம் கூறியுள்ளது".