Aug
19

கருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு
Author: nandhini | Posted Date : 09:47 (19/08/2017)A+       A-

கருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

Aug 19
Thirumavalavan-meets-Karunanidhi , கருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டுவரும் திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் கொடுக்கவே திருமாவளவன் அவரை சந்தித்து வந்துள்ளார்.

இதற்கு பின் பேட்டி அளித்த திருமாவளவன், "விசிக-வின் இந்த மாநாடு நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான விவகாரத்தில் பாஜக-வின் தலையீடு இருப்பதாகவே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.