Aug
21

பாஜக தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு
Author: anish | Posted Date : 11:01 (21/08/2017)A+       A-

பாஜக தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு

Aug 21
BJP-president-Amit-Shah-s-Tamilnadu-visit-postponed , பாஜக தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு

பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷா இன்று தமிழகம் வர இருந்த நிலையில் தற்போது அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 22,23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக பாஜக முன்னர் தெரிவித்திருந்தது. 22,23 ஆகிய தேதிகளில் சென்னையிலும், 24-ஆம் தேதி கோயம்பத்தூரிலும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதால் அவரது தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. அமித்ஷாவின் தமிழக பயணம் ஒத்தி வைப்பிற்கும், அணி இணைப்புக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா? எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனிடையே 26-ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வரலாம் எனவும் கூறப்படுகிறது.