Aug
21

தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து உலகமே கிண்டல் செய்கின்றது- குஷ்பூ
Author: jvp | Posted Date : 06:50 (21/08/2017)A+       A-

தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து உலகமே கிண்டல் செய்கின்றது- குஷ்பூ

Aug 21
kushboo-talks-about-tamilnadu-govt , தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து உலகமே கிண்டல் செய்கின்றது- குஷ்பூ

அதிமுகவின் தற்போதையை செயல்பாடுகள் குறித்து குஷ்பூ தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில், "நேற்று வரை எப்படி எப்படியெல்லாம் திட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இணைவதைப் பாரத்தால் மிகவும் கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது. அவர்கள் இணைந்தாலும் மக்களுக்கு எந்தவிதமான நன்மையுமே இல்லை. கூவத்தூர் பேரம் போல இனிமேலும் அரசியல் நடத்துவார்கள்.

தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து உலகமே கிண்டல் செய்கிறது. பா.ஜ.கவால் தமிழகத்துக்குள் நுழைய எந்த வழியும் இல்லை. அதனால் இந்த பாதையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர்களின் நெருக்கடியால் இணைகிறார்கள். 4 வருடமும் இப்படியே அடிமைபோல்தான் இருப்பார்கள். ஆனால் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.






RELATED STORIES