Aug
22

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது - மத்திய அரசு
Author: anish | Posted Date : 03:11 (22/08/2017)A+       A-

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது - மத்திய அரசு

Aug 22
No-NEET-exemption-for-TN--says-Central-Government , நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது - மத்திய அரசு

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் கடந்த வார விசாரணையின் போது நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்தார். ஒரு மாநிலத்திற்கு விலக்கு அளித்தால் அது மற்ற மாநிலங்களுக்கும் தூண்டுதலாக அமையும் என அவர் கூறினார். மேலும், தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு அவரச சட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. முன்னதாக தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க முடியும் என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகள் அனுமதி அளித்தன. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. இதனால் பல ஆயிரம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.