Aug
22

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; மடக்கிப்பிடித்த சுங்கத்துறையினர்
Author: jvp | Posted Date : 08:43 (22/08/2017)A+       A-

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; மடக்கிப்பிடித்த சுங்கத்துறையினர்

Aug 22
24-kg-of-Drugs-seized , இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; மடக்கிப்பிடித்த சுங்கத்துறையினர்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாக சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் இரு பிரிவாக மறைந்து நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனையிட்டதில் ஹஷிஷ் என்கின்ற போதைப்பொருள் இருப்பது தெ‌ரியவந்தது. சுமார் 24 கிலோ போதைப்பொருளை சுங்கத்துறையினர் கைப்பற்றி உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.