Aug
22

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்த வைகோ
Author: anish | Posted Date : 08:38 (22/08/2017)A+       A-

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்த வைகோ

Aug 22
Vaiko-met-DMK-leader-Karunanidhi-after-2-year , இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்த வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அவரை திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க. ஸ்டாலின் வாசல் வரை வந்து வைகோவை வரவேற்றார். சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை வைகோ நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர். உடல் நலம் குன்றி காணப்படும் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக வைகோ கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுள்ளார.