அண்ணா வளர்த்த தமிழ் இல்லை; ஆண்டாள் வளர்த்த தமிழ்: தமிழிசை
Author: SRK | Posted Date : 09:04 (13/02/2018) A+       A-

அண்ணா வளர்த்த தமிழ் இல்லை; ஆண்டாள் வளர்த்த தமிழ்: தமிழிசை

Feb 13


மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ் மொழியை அண்ணா, வளர்க்கவில்லை, ஆண்டாள் தான் வளர்த்தார் என கூறினார். 

மத்திய பட்ஜெட்டின் மீதுள்ள எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தமிழிசை பதிலடி கொடுத்தார். "இந்த பட்ஜெட்டை விமர்சனம் செய்யும் ப.சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத்துக்கு என்ன திட்டம் கொண்டு வந்தார்" என கேள்வி எழுப்பினார். 

மேலும், "இது பெரியார் மண் அல்ல; பெரியாழ்வார் மண்; அண்ணா வளர்த்த தமிழ் அல்ல; இது ஆண்டாள் வளர்த்த தமிழ்" என்றும், திராவிட அரசியலை நீக்கி ஆன்மீக அரசியலை கொண்டு வருவதே பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம் என்றும் அவர் கூறினார்.

"ஆன்மீக அரசியல் என்றவுடன் உங்களுக்கு ஒருவர் நினைவுக்கு வருவார். ஆனால், ஆன்மீக அரசியலுக்கு வித்திட்டதே பாரதிய ஜனதா தான்" என்று ரஜினிகாந்த்தை சுட்டிக் காட்டி தமிழிசை பேசினார். 


RELATED STORIES