அப்போலோவில் ஜெயலலிதாவை விவேக் பார்த்தாரா?
Author: Muthumari | Posted Date : 03:27 (13/02/2018) A+       A-

அப்போலோவில் ஜெயலலிதாவை விவேக் பார்த்தாரா?

Feb 13


ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது விவேக் அவரை பார்க்கவில்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயாடிவியின் உரிமையாளருமான விவேக், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். நீதிபதி அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்தார். விசாரணைக்கு பிறகு விவேக் செய்தியாளர்களை சந்திக்கையில், "என்னிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன். தற்போது என்னால் எந்த கேள்விக்கும் விடையளிக்க முடியாது" என பதிலளிக்காமல் நழுவினார்.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் இருந்து வந்த தகவலில் அடிப்படையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை விவேக் பார்த்தாரா? என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு விவேக், 'தான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை' என கூறி உள்ளார். மேலும் வருகிற 28ம் தேதி விவேக் மீண்டும் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.