'நான் தான் சூப்பர் ஸ்டார்' -தினகரனின் கலகல பேச்சு!
Author: Muthumari | Posted Date : 04:37 (13/02/2018) A+       A-

'நான் தான் சூப்பர் ஸ்டார்' -தினகரனின் கலகல பேச்சு!

Feb 13


ஆர்.கே. நகரில் வெற்றி பெற வைத்து மக்கள் என்னை சூப்பர்ஸ்டார் ஆக்கி விட்டார்கள், இனி நான் தான் சூப்பர்ஸ்டார்  என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்க டிடிவி தினகரன் இன்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் நிலை குறித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று 100க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கவில்லை. ரஜினி  திரைப்படத்தில் நடித்து மக்களிடையே சூப்பர்ஸ்டார் பட்டம் பெற்றார். ஆனால் நான் திரைப்படத்தில் நடிக்காமலேயே மக்கள் என்னை சூப்பர் ஸ்டாராக ஆக்கிவிட்டார்கள். ஆர்.கே. நகரில் வெற்றி பெற வைத்து சூப்பர் ஸ்டாராக மாற்றிவிட்டார்கள். இனிமேல் நான் தான் சூப்பர் ஸ்டார்" என பேசியுள்ளார்.