மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Posted Date : 01:43 (13/03/2018) A+       A-

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Mar 13


காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மாலத்தீவுக்கு வடகிழக்கே 290 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். வட தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 15,16  ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடலில் சுமார் 45 கிமீ  முதல் 65 கிமீ வரை காற்று வீசும். இதனால் தென் தமிழகம், லட்சத்தீவு, குமரி மீனவர்கள் இரு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 


RELATED STORIES