இனி தமிழிலேயே கூகுளில் விளம்பரம் செய்யலாம்!
Posted Date : 02:44 (13/03/2018) A+       A-

இனி தமிழிலேயே கூகுளில் விளம்பரம் செய்யலாம்!

Mar 13


இந்தியாவில் உள்ள பல தேசிய மொழிகளுக்கும் ஆதரவு தரும் வகையில் கூகுள் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி, தமிழ் மொழியில் இணையம் பயன்படுத்துவோர் அதிகமாக இருக்கின்றனர், தமிழ் மொழியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேசுகின்றனர், சிங்கப்பூர். இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் மொழி அரசு மொழியாகவும், மலேசியா, மொரிஷியஸ், தென் ஆப்ரிக்க நாடுகளில் சிறுபான்மை மொழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழ் மொழி பேசும் மக்களின் வசதிக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் இன்று சென்னையில் “Google for Tamil” எனும் நிகழ்வை “ஹயாத் ரிஜென்ஸி”  ஹோட்டலில் நடத்திவருகிறது. இதில் குறிப்பாக, இந்திய மொழிகளை இணையத்தில் கையாளும் சிக்கல்,​தமிழுக்கான  இணைய தள கட்டமைப்பை ​வலுப்படுத்துதல், தமிழில் இணைய தளம் நடத்துவோர் கூகுள் அட்சென்ஸ் பயன்படுத்துதல், கூகுள் விளம்பரங்கள் வழியாக வருமானம் ஈட்டுதல் போன்ற தலைப்புகளில் விவாதிக்கின்றார்கள். இதற்கு முன் இந்தியாவில் இந்திக்கும், பெங்காலிக்கும் கூகுள் இந்த வசதியை செய்து தந்திருந்தது.