பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
Author: Newstm Desk | Posted Date : 01:48 (16/04/2018) A+       A-

பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

Apr 16


பாலியல் வன்கொடுமை செய்பவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இன்று சென்னை தியாகராய நகரில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "ஜெயலலிதாவின் சிகிச்சை விவகாரத்தில் ராம் மோகன் ராவ் அதிகாரியாக இல்லாமல் அரசியல்வாதியாக தான் நடந்துகொண்டார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தெருவில் செல்பவர் போல் பேசக்கூடாது. காவிரி விவகாரத்தில் நாங்கள் நீதிமன்றத்தையே முழுமையாக நம்பியிருக்கிறோம்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவரை என்கவுண்டர் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகளைப் போல கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பேராசிரியை பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மிகவும் கண்டனத்திற்குரியது. மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.