கோச்சடையான் பட விவகாரம்: மீடியா ஒன் நிறுவனத்தின் மனு தள்ளுபடி!
Author: Newstm Desk | Posted Date : 06:01 (16/04/2018) A+       A-

கோச்சடையான் பட விவகாரம்: மீடியா ஒன் நிறுவனத்தின் மனு தள்ளுபடி!

Apr 16


கோச்சடையான் படத்திற்கு வாங்கப்பட்ட கடனில் மீதியுள்ள தொகையை மீடியா ஒன் நிறுவனம் செலுத்தும் என அந்நிறுவனம் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

கோச்சடையான் பட விவகாரத்தில் ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடியில் ரூ.9.2 கோடி வழங்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள ரூ.80 லட்சத்தை லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோச்சடையான் பட தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தது. அதில், மீதமுள்ள 80 லட்சத்தை ஆட் பீரோ நிறுவனத்திற்கு மீடியா ஒன் நிறுவனம் செலுத்தும், எனவே இதற்கும், லதா ரஜினிகாந்திற்கும் சம்மந்தம் இல்லை என நீதிமன்றம் கூற அந்நிறுவனம் பரிந்துரைத்தது.

இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மீதமுள்ள ரூ.80 லட்சத்தை லதா ரஜினிகாந்த் தான் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கஉத்தரவிட்டுள்ளது.