நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு
நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு
பேராசிரியர் நிர்மலா தேவி மாணவர்களை திசைதிருப்ப முயன்ற விவகாரத்தில், உயர்மட்ட குழுவின் விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களில் அருப்புக்கோட்டை கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியை நிர்மலா தேவி, தனது மாணவிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வெளியானது. அதில் அவர், மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்த முயற்சி செய்தது தெரிய வந்தது. இது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், பல உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த ஆடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதால், இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நிர்மலா தேவி விவகாரம் குறித்து உடனடி விசாரணை செய்ய உயர்மட்ட குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர் சந்தானம் தலைமை தாங்குவார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.




