காவிரி: உண்ணாவிரதத்தை அடுத்து அதிமுக பொதுக்கூட்டம்
Author: Ishwarya G | Posted Date : 05:17 (20/04/2018) A+       A-

காவிரி: உண்ணாவிரதத்தை அடுத்து அதிமுக பொதுக்கூட்டம்

Apr 20


காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத உச்சநீதிமன்றத்தை கண்டித்து ஏப்ரல் 2ம் தேதி அதிமுக சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 


இந்நிலையில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து மத்திய அரசு விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ஏப். 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

28ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், 29ம் தேதி நாகை மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சரும் பங்கேற்பார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப். 29ல் புதுக்கோட்டை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 28ல் கரூர் மாவட்டத்தில் எம்.பி தம்பிதுரை தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.