பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் மாற்றம் இல்லை!

  முத்துமாரி   | Last Modified : 02 Jan, 2018 04:25 pm


இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதனையடுத்து இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் எந்த மாற்றமும் இன்றி 34,065.83 புள்ளிகளில் முடிந்தது. பிற்பகல் நேரத்தில் 33,863 என அதிகரித்து காணப்பட்டது. 

அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6.65 புள்ளிகள் உயர்ந்து, 10,442.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர முடிவில் 10,477.55 ஆக இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, மஹிந்திரா & மஹிந்திரா, டாக்டர் ரெட்டி லேப்ஸ், சிப்லா, சன் பார்மா, கெயில், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, டிசிஎஸ், எச்சிஎல், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

Advertisement:
[X] Close