இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

  முத்துமாரி   | Last Modified : 03 Jan, 2018 04:48 pm


தொடக்கத்தில் ஏற்றத்தை சந்தித்த பங்குச்சந்தை இன்று வர்த்தக நேர முடிவில் சிறிது சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 19 புள்ளிகள் குறைந்து 33,793.38 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக தொடக்கத்தில் 33,974.23 என அதிகரித்து காணப்பட்டது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,443.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக காலையில் 10,498.20 ஆக இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, அதானி போர்ட்ஸ், எல்&டி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாடா ஸ்டீல், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், மாருதி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

Advertisement:
[X] Close