இன்று பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

  முத்துமாரி   | Last Modified : 05 Mar, 2018 04:19 pm


இன்று பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தன. இறுதியில் 33,746.78 என்ற புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக  34,034.25 என்ற புள்ளிகளை தொட்டது. 

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 99.50 புள்ளிகள் குறைந்து 10,358.85 என்ற புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக 10,428.70 என்ற புள்ளிகளை எட்டியது.

மேலும் இன்று சன் பார்மா, டிசிஎஸ், தேசிய அனல் மின் கழகம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எம்& எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

Advertisement:
[X] Close