பங்குச்சந்தை சரிவு; சென்செக்ஸ் 21 புள்ளிகள் குறைவு

  முத்துமாரி   | Last Modified : 14 Mar, 2018 04:46 pm


இந்த வாரத்தில் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றன. இன்று உ.பி, பீகார் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் பங்குச்சந்தை சிறிது இறக்கம் கண்டுள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 21.04 புள்ளிகள் குறைந்து 33,835.74 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 33,875.15 என்ற அளவில் இருந்தது. 

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்ஃடி 15.95 புள்ளிகள் குறைந்து 10,410.90 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், 10,420.65 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டியது.  

எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், பேங்க் ஆஃப்  இந்தியா, ஆந்திரா பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் குறைந்தன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி, எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.

Advertisement:
[X] Close