• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

அதிகரிக்கிறது வீட்டுக்கடன் வட்டி!

  shriram   | Last Modified : 06 Jun, 2018 09:27 pm

reserve-bank-increases-repo-rate

3 ஆண்டுகளுக்கு பிறகு, ரிசர்வ் வங்கி முதல்முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ளதால், வங்கிகள் வீட்டுக்கடன் வட்டியை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி நடத்தும் நாணய கொள்கைக்கான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய வங்கி மற்ற வங்கிகளுக்கு கடனளிக்கும் ரெப்போ விகிதத்தை உயர்த்த, அனைத்து போர்டு உறுப்பினர்களும் ஒருமனதாக வாக்களித்தனர். கடந்த 4 இரண்டு மாத சந்திப்புகளில், ரெப்போ விகிதத்தை 6 சதவீதத்தில் வைத்திருந்த நிலையில், தற்போது 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் பணவீக்கத்தை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டாலும், கடந்த சில மாதங்களை போல  கொள்கையில் எந்த மாற்றமும் இல்லையென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இதைத் தொடர்நது, வீட்டுக்கடன், வாகனக் கடன் ஆகியவற்றின் வட்டி விகிதத்தை வங்கிகள் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
[X] Close