• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

பங்குச்சந்தை முடிவு: சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 04:33 pm

sensex-up-46-pts-nifty-closes-above-10-800

இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் 35,835.44 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 46.64 புள்ளிகள் அதிகரித்து 35,739.16 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சரிசம அளவு ஏற்ற இறக்கத்தை சந்தித்தது.  காலையில் 10,887.50 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 13.85 புள்ளிகள் உயர்ந்து 10,856.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 10,893யைத் தொட்டது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், டிசிஎஸ், சன் பார்மா, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர்  உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் விலை குறைந்தது. 

Advertisement:
[X] Close