படுசரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 219 புள்ளிகள் சரிவு!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 04:58 pm

sensex-loses-219-points-nifty-closes-below-10-800

வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள்  படுசரிவை சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,783.75 என்ற புள்ளிகளில் தொடங்கி 35,470.35 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.  இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 219.25 புள்ளிகள் சரிந்தன. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை அளவீடான நிஃப்டி 10,822.90  புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 59.40 புள்ளிகள் சரிந்து  10,762.45ல் வர்த்தகமானது. அதிகபட்ச புள்ளிகளாக தொடக்கத்தில் 10,831.05 என காணப்பட்டது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, இன்ஃபோசிஸ், வேதாந்தா, கோட்டாக் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளன. அத்தேர் நேரத்தில்  டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா. எல் & டி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவன பங்குகள் விலை குறைந்தன.

Advertisement:
[X] Close