27-06-2018 படுசரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 04:29 pm

sensex-falls-over-250-pts-nifty-closes-below-10-700

சமீப சில நாட்களாக பங்குச்சந்தைகள்  ஏற்ற, இறக்கத்தை மாறி மாறி சந்தித்து வருகின்றன. நேற்று பங்குச்சந்தை புள்ளிகள் சிறிது அதிகரித்த நிலையில், இன்று படுமோசமாக முடிவுற்றுள்ளது. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,543.89 என்ற புள்ளிகளில் தொடங்கி 35,217.11 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.  இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 272.93 புள்ளிகள் சரிந்தன. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை அளவீடான நிஃப்டி 10,785.50  புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 97.75 புள்ளிகள் சரிந்து  10,762.45ல் வர்த்தகமானது. அதிகபட்ச புள்ளிகளாக தொடக்கத்தில் 10,785.50 என காணப்பட்டது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, எச்டிஎப்சி, டிசிஎஸ், கோல் இந்தியா, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது. ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், வேதாந்தா, கோட்டாக் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட அநேக நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

Advertisement:
[X] Close