சிங்கபூரிலிருந்து ஃபேஸ்புக்கில் 'காலா' படத்தை 'லைவ்' செய்தவர் கைது

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 10:16 am

kaala-live-stream-on-facebook-one-arrested-in-singapore

சிங்கபூரில் காலா படத்ததை தியேட்டரில் இருந்து ஃபேஸ்புக் லைவ் செய்த நபர் கைது செய்யப்பட்டார். 

கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு நாடு முழுவதும் காலா திரைப்படம் இன்று வெளியானது. மற்ற நாடுகளில் நேற்றே காலா வெளியானது.அதனை பார்க்க ரசிகர்கள் உலகம் முழுவதும் படம் ரிலீசான தியேட்டர்களில் குவிந்தனர். 

இந்நிலையில் சிங்கப்பூர் கேத்தே திரையரங்கிலிருந்து ஃபேஸ்புக்கில் காலா திரைப்படம் நேற்று 45 நிமிடங்கள் லைவ் செய்யப்பட்டது.  இதனைக் கண்டு படக்குழு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தயாரிப்பாளர் தனந்ஜெயன் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அந்த நபரை சிங்கபூர் போலீசார் கைது செய்து விட்டதாக தெரிவித்தார். 

சிங்கப்பூரில் வசித்து வரும் பிரவீன் என்பவர் தான் ஃபேஸ்புக்கில் லைவ்வாக படத்தை ஒளிப்பரப்பி உள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு ஃபேஸ்புக்கில் இருந்த லைவ் பதிவும் அழிக்கப்பட்டது. 

..
Advertisement:
[X] Close