அன்பு அண்ணன் விஜய் - நெகிழும் சண்டை இயக்குநர்

  திஷா   | Last Modified : 07 Jun, 2018 11:01 am

stunt-silva-s-tweet-about-vijay

தூத்துக்குடியின் துயர் சம்பவம் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் 100 நாளில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார்கள். அப்போது கூட்டத்தைக் கலைக்க காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். 

இது இந்திய அளவில் கவனம் பெற்றது. இந்த சம்பவத்திற்கு தமிழக மக்கள், அரசியல் வாதிகள், நடிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். 

 

இந்நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நடிகர் விஜய் கடந்த செவ்வாய் கிழமை இரவு தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று தனது வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். அதோடு மிக எளிமையாக அந்த மக்களோடு அமர்ந்து பேசியிருக்கிறார், கூடவே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்திருக்கிறார். இது சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் வைரல் ஆனது. 

இறந்தவர்களின் ஒருவர் சண்டை இயக்குநர் சில்வாவின் மைத்துனரும் ஆவார். அவர் தனது ட்விட்டரில், "எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச் சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் @actorvijay அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏" என விஜய்க்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும், நீட் தேர்வினால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் வீட்டிற்கும் இப்படி சைலன்டாக சென்று வந்தார் விஜய். 

..
Advertisement:
[X] Close