ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது- விவேக் ட்வீட்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jun, 2018 06:36 pm

actor-vivek-tweet-about-rajinikanth-s-kaala

ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்றுவிட்டதாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து, பல்வேறு தடை, எதிர்ப்புகளுக்கு பின் வெளியான காலா படத்திற்கு பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துவருகிறது. வெளியான முதல் நாளன்றே ரூ.50 வசூல் செய்து சாதனை படைத்தது. காலாவை பாராட்டி பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “காலா பார்த்தேன். Super starஐ வித்யாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள். எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது” என பதிவிட்டுள்ளார். 


 

..
Advertisement:
[X] Close