#BiggBoss Day 8: 2 நிமிட கேப்பில் என்ன பண்றீங்க மகத்?

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 09:44 am

biggboss-day-8-nithya-becomes-new-leader

7வது நாள் நேற்றும் தொடர்ந்தது. கமல் ஆங்கிலத்தில் பேசியதை பற்றி சென்றாயனுக்கு வைஷ்ணவி விளக்கி கொண்டு இருந்தார். யாஷிக்காவும் ஐஸ்வர்யாவும் நீச்சல் குளத்தில் கால் நினைத்து கிசுகிசுத்துக் கொண்டு இருந்தனர். மகத் காதலியை மாற்றுவார் என்று கூறிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. யாஷிக்காவுக்கு மகத் மீது இன்டரஸ்ட் வந்திருக்கிறது. இது நீளுமா என்பதை இனிதான் பாரக்க வேண்டும். பின் தன் தலையில் பேன் வந்துவிட்டதாக கூறினார் யாஷிக்கா. வெள்ளந்தியா இருக்கியே மா..

கிட்சன் பக்கம் வழக்கம் போல நித்யா முன் நின்றுக்கொண்டிருந்த பாலாஜியை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தார் பிக்பாஸ். இந்த வீட்டில் யார் இல்லாமல் இருந்தால் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு யோசிக்காமல் மமதி என்றார். அவர் மும்தாஜ்க்கு ஆதரவாக இருப்பதற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்துகிறார் என்றார்.

ரம்யா, மும்தாஜ், மமதி, டேனி, ஐஸ்வர்யா, யாஷிக்கா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஆகியோர் நித்யா பெயரை கூறினார்கள். தனது அணியினரை வேலை செய்பவர்கள் போல நடத்துவதால் மும்தாஜ் பெயரை கூறினார் அனந்த் வைத்தியநாதன். மும்தாஜின் பேச்சில் இருக்கும் அதிகாரத்தனம் பொதுவாக வீட்டில் இருக்கும் அனைவரையும் அவ்வாறு யோசிக்க வைத்திருக்கும். பாலாஜி சென்ன காரணத்தையே கூறி நித்யாவும் யாஷிக்காவும் மமதியின் பெயரை கூறினார்கள். ஜனனி பொன்னம்பலத்தின் உடல் நலக்குறைவால் அவர் பெயரை கூறினார். ரித்விகா, அனந்த் வைத்தியநாதன் பெயரை கூறினார்.

மகத் சிம்புவை மிஸ் பண்ணுவதாக கூறிக்கொண்டு இருந்தார். ஒரு விளம்பர இடைவேளைக்கு நடுவில் வரும் பகுதியில் நிச்சயமாக நித்யா-பாலாஜி காட்சி இடம்பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் பிக்பாஸ். நித்யா, சென்றாயன், பாலாஜி ஒன்றாக சாப்பிட்டுக்     கொண்டு இருந்தனர். பாலாஜி இந்த முறையும் ஏதோ கூற, நித்யா அழுதுவிட்டார். ஒரு வார முடிவில் இப்போது தான் அவர் அழுகிறார். அழாத நித்யா என்று சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தார் பாலாஜி. குழுப்பிறீங்களே சார்.

விளக்கை எல்லாம் அணைத்த பிறகு யாஷிக்கா, ஐஸ்வர்யா படுத்திருந்த பெட்டில் வந்து படுத்துக்கொண்டார் மகத். விளையாட்டாக தான் அப்படி செய்தார். அவர் வந்ததை பார்த்து கிட்சனில் இருந்து பதறிப்போய் வந்த பாலாஜி, கலாட்டா செய்தார். கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஜனனி பாலாஜியின் குரல் கேட்டு எழுந்து, “2 நிமிஷத்துல என்னடா பண்ற” என்றார். அனைவரும் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டனர்.

மகத் ஆணகள் அறைக்கு சென்று படுத்தபோது, பொன்னம்பலம் பெண்கள் அறையில் நடந்தது குறித்து கேட்டார். சும்மா விளையாட்டாக தான்  என்றார் மகத். இங்க அப்பா அம்மா விளையாட்டுலாம் விளையாட கூடாது என்று கடிந்தார் பொன்னம்பலம். அவர் அப்படி சொன்னதும் டென்ஷனான மகத் நண்பர்களாக இருக்கிறோம், கொச்சைப்படுத்தி பேசாதீர்கள் என்றார்.

இரண்டு தலைமுறையினருக்கு இடையே இருக்கும் இடைவேளையை நன்றாக பார்க்க முடிந்தது. இன்றும் ஆண், பெண் ஒரே கட்டிலில் உறங்குவதை தவறாக பார்ப்பவர்களும், அதெல்லாம் இப்போ ஒன்னுமே இல்லை என்பவர்களுமாக இருக்கிறது பிக்பாஸ் வீடு.

பின் அடுத்த நாள் சமைப்பதற்காக தயார் செய்து வைத்திருந்த மாவை எங்கே வைப்பது என்ற பஞ்சாயத்து. அதே தான்.. சாப்பாடு தான் பிரச்னை நேற்றும். எப்படியோ தொடங்கி, நித்யா தான் அதற்கு காரணம் என்பது போல முடித்தார்கள் மும்தாஜும் , மமதியும்.

8வது நாள் ‘எத்தனை பிறவிகள்’ இருந்தாலும் என்ற பாடலோடு தொடங்கியது. ஆடாலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே ஆடினார்கள் போட்டியாளர்கள். அனந்த் வைத்தியநாதனும் ஆடினார்.

சமைக்க சென்ற போது கிட்சனில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இல்லை. இருந்த கோதுமை மாவு வைத்து தோசை சுட்டுக்கொண்டு இருந்தார் நித்யா.  அப்போது டக்கென்ற கேஸ் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்டனையா? டாஸ்கா என்ற குழப்பத்தில் அனைவரும் இருந்தனர்.

பின் சமைப்பதற்கான பொருட்களை போட்டியாளர்கள் தான் வாங்க வேண்டும் என்று கூறினார் பிக்பாஸ். ஆண்களில் இருந்து   2பேரும், பெண்களில் இருந்து 2 பேரும் 2 அணிகளாக பிரிந்து ஷாப்பிங் செய்ய வேண்டும். அவர்களுக்க ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். வீட்டை நிர்வாகம் செய்வதில் ஆண்கள் சிறந்தவர்களா, பெண்கள் சிறந்தவர்களா என்பதை கண்டறிய இந்த போட்டி.
ஆண்கள் டீமில் இருந்து அனைவரும் ஆலோசித்து டேனி மற்றும் சென்றாயனை தேர்வு செய்தனர். பெண்கள் டீமில் மும்தாஜும், மமதியும் செல்வதாக அவர்களே முடிவு செய்துக்கொண்டனர். அவர்கள் செல்வதில் ஐஸ்வர்யா முதல் ஜனனி உட்பட யாருக்கும் விருப்பம் இல்லை.

மார்ககெட் செட்டப்பில் இருந்த அறைக்குள் டேனியும், சென்றாயனும் நுழைந்தனர். பேரம் பேசி அள்ளி அள்ளி பொருட்களை வாங்கினர். பின் மமதியும், மும்தாஜும் ஓவர் நம்பிக்கையுடன் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற உடன் அந்த இடத்தை பார்த்து ஆச்சர்யப்படுவதற்கே பாதி நேரம் விரயமானது. பின் 5 எலுமிச்சைக்காக பாதி நேரத்தை வீணாக்கினார் மும்தாஜ். அதற்கு அவர் காசும் தரவில்லை. அதற்குள் டாஸ்க் முடிந்துவிட கொடுத்த பணத்தில் பாதியை அப்படியே எடுத்துக்கொண்டு பெருமையாக வந்தனர் மமதியும், மும்தாஜும்.

அவர்கள் உள்ளே ஷாப்பிங் செய்து  கொண்டு இருக்க வீட்டில் இருந்தவர்கள் உள்ளே சென்றவர்களை பற்றி குறைக்கூறிக்கொண்டு இருந்தனர். அவர்களில் பலர் மமதி, மும்தாஜ் மீது கோபத்தில் இருப்பது தெரிந்தது. மும்தாஜ் வேண்டுமென்ற சிலவற்றை செய்துவிட்டு பின் அதனை கூறிக்கொண்டு இருக்கிறார் என்று பலரும் கூற, பாராட்டுக்களை எதிர்பார்த்து அப்படி செய்கிறார் என்றார் பாலாஜி. யாஷிக்காவிற்கு சென்றாயன் மீது கோபம். அவர் எப்போது யாஷிக்காவை திட்டினாராம் , அந்த கோபத்தில் தான் முட்டையை வேகமாக உடைத்தாக கூறினார் யாஷிக்கா.

இந்த டாஸ்கில் நிறைய பொருட்கள் வைத்திருந்ததால் டேனி அணி வெற்றி பெற்றது. மும்தாஜ் அணி வாங்கிய பொருட்களில் உப்பு, சர்க்கரை கூட இல்லை. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்கள் அணிக்குமே டேனி அணி வெற்றி பெற்றதில் தான் மகிழ்ச்சி.
அந்த அறையில் மார்க்கெட் போன்று கத்திக்கொண்டே இருந்தார்கள் என்பதால் தான் வாங்க முடியவில்லை என்று கூறினார்கள் மமதியும், மும்தாஜும். உண்மையில் மும்தாஜ் தான் கத்திக்கொண்டுஇருந்தார். எனினும் இமேஜ்ஜை பாதுகாத்துக்கொள்ள அவ்வாறு பேசினார்.

மும்தாஜ் பற்றி டேனியிடம் பேசிக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி. அவர் கூறுவதில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியும்தான் ஆனால் அவர் அதிகமாக புறம் பேசிக்கொண்டே இருக்கிறார். இது வீட்டில் பல பிரச்னைகளை விரைவில் உண்டாக்கும். நடுவில் மும்தாஜை மரமண்டையென்றெல்லாம் கூறினார்.

பெரிய ஜோக் பொன்னம்பலம் “மும்தாஜுக்காக தாஜ்மகால் கட்டலாம், தாஜ்மகாலுக்காக மும்தாஜை கட்ட முடியுமா?” என்றார். மும்தாஜ் என்ற பெயரை கேட்டலே அலறுகிறார் சென்றாயன். பின் இந்த ஜோக்குக்கு??! சிரித்து விட்டு சென்றார் மமதி.

பிக்பாஸ் வீட்டில் அரசியல் தொடங்கி விட்டது என்று யாஷிக்காவிடம் கூறிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா.பின் ஜனனியின் தலைவி பொறுப்பு முடிவதாக அறிவித்தார் பிக்பாஸ். பின் பலர் நித்யா வீட்டில் இல்லை என்றால் சரியாக இருக்கும் என்று கூறியதால் அவரை தலைவியாக்கினார் பிக்பாஸ் ஆங்.. பிக்பாஸா கொக்கா! உடனே வைஷ்ணவியும், ரம்யாவும் காதில் எதையோ பேசிக்கொண்டனர்.

மீண்டும் இசை எங்கிருந்து வருகிறது என்ற ஜோக்கினால் அனந்த் கோபமடைந்தார்.   இதனால் தனது ரசிகர்கள் வருத்தப்படுவார்கள் என்றார். யாரப்பா அந்த கூட்டம்? அவர் எவிக்டாகி வெளியே வந்தபின் அவரது ரசிகர்கள் கூட்டம் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக இந்த வாரம் நடக்கவிருக்கும் முதல் எவிக்ஷனுக்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் 2 பேரை நாமினேட் செய்தனர். தலைவியான நித்யாவை தவிற மற்றவர்களுள் இருந்து அவர்கள் 2 பேரை தேர்தெடுக்க வேண்டும். இந்த வாரம் மும்தாஜ், மமதி, அனந்த், பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

பின் இதுபற்றி பேசிக்கொண்டு இருந்தனர் பொன்னம்பலமும்- அனந்தும். அப்போது நானே உங்களது பெரிய ரசிகன், நீங்க வெளியேற மாட்டீர்கள் என்றார் பொன்னம்பலம். ஓ.. அந்த கூட்டம் இங்க தான் இருக்கு என்று தோன்றியது.

வீட்டில் பலருக்கு இன்னும் நித்யாவுடன் சரியான உறவு உருவாகவில்லை என்னும் பட்சத்தில் அவர் தலைவியாக்கப்பட்டு இருக்கிறார். பிக்பாசின் இந்த ட்விஸ்ட் இனி வீட்டில் சுவாரஸ்யத்தை கூட்டுமா என்று பார்ப்போம்.

பிக்பாஸ் 2 றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்

Advertisement:
[X] Close