#BiggBoss Day 18: பொண்டாட்டி மாதிரி நடத்துறாரு!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 04:36 pm

what-happened-in-biggboss-house-day-18

ஒரே டாஸ்க்கை 3வது நாளாக நேற்றும் தொடர வைத்தார் பிக்பாஸ். அதில் அவர் எதிர்பார்ப்பது போன்று எந்த சுவாரஸ்யமான விஷயமும் நடந்துவிடவில்லை.

18ம் நாள் காலை பலர் தூங்கி எழுவதற்கு முன்பே தண்ணீல கண்டம் டாஸ்க்கை தொடங்கினார் பிக்பாஸ். வாய் திறந்து திட்ட முடியாததால் அமைதியாக டாஸ்க்கை தொடங்கினர் போட்டியாளர்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸை திட்ட மட்டுமே யோசிக்கிறார்கள்.
டாஸ்க்கை செய்து கொண்டு இருந்த மகத்துக்கு காபி ஊட்டி விட்டுக்கொண்டு இருந்தார் டேனி. அப்போது, அவர் என்னை பொண்டாட்டி போல நடத்துவதாக பிக்பாஸிடம் விளையாட்டாக புகார் கூறிக்கொண்டு இருந்தார் டேனி. இது போன்ற உரையாடல்களுக்கு பிக்பாஸ் பதில் கூறமாட்டார். ஒரு வேளை அவர் அதையும் செய்திருந்தால், உங்களை மட்டுமா அப்படி நடத்துகிறார் என்ற டேனியை சமாதானப்படுத்தி இருப்பார்.

இந்த போட்டியில் எதிரணி வெறித்தனமாக விளையாடுவதாக கூறிக்கொண்டு இருந்தார் ரித்விகா. உண்மையில் இந்த போட்டியை வெறித்தனமாக விளையாடுவது அவர் தான். ஆனால் பாவம் அவர் அணியில் இருப்பவர்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
மும்தாஜ் காலையில் இருந்து பெட்டில் இருந்து எழுந்திருக்காமல் இருந்ததால் நாய் குரைக்க தொடங்கியது. மார்னிங் சிக்னஸ் இருக்கிறது என்று மும்தாஜ் கேமரா முன்பே பலமுறை கூறிவிட்டார். அதெல்லாம் தெரிந்து தான் பிக்பாஸ் இந்த வீட்டிற்குள் அவரை அனுப்பி வைத்திருப்பார். ஆனாலும் அவர் படுத்திருக்கும் போது நாய் குரைக்கும் சப்தத்தை போட்டு குழப்பி விடுவது எல்லாம்.. வாட்டே வாய் மனம் பிக்பாஸுக்கு. ஜனனி விஷ பாட்டில் என்றால் பிக்பாஸ் விஷ அண்டா.

ரித்விகா இந்த டாஸ்க்கில் தீவிரமாக இருப்பதை பார்த்த அனந்த் அவர் பாணியில் அட்வைஸ் செய்து கொண்டு இருந்தார். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் வேறுப்பட்டு தான் இருப்பார்கள், அவர்களை நாம் பேசி மாற்றிவிட முடியுமா. நாம் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் என்ற ரீதியில் பேசிக்கொண்டு இருந்தார். அனந்த் அதிகமாக பேசுவதில்லை என்றாலும் பேசும் போதெல்லாம் அறிவுரைகளையும் தத்துவங்களையும் கூறுகிறார்.

மும்தாஜும் ஐஸ்வர்யாவும் தனியாக ஷாரிக் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யா பெட்டில் ஷாரிக் படுத்துக்கொள்வதை பார்க்க சௌகரியமாக இல்லை என்று மும்தாஜ் கூறினார். ஆமா தப்பு தான் இனி அப்படி நடக்காம பார்த்துக்குறேன் என்று ஆமோதித்தார் ஐஸ். தப்பு நடக்காதுனு தெரியும், ஆனால் வெளியே போய் உலகத்த நாம ஃபேஸ் பண்ணணும் என்ற மும்தாஜ் வார்த்தைகளில் அக்கறை தெரிந்தது. உடனே ஐ லவ் யூ என்றெல்லாம் கூறி முத்த பறிமாற்றம் செய்து கொண்டனர் இருவரும்.

பின் ஷாரிக்கிடம் இது பற்றி கூறினார் ஐஸ். உள்ளே முத்தம் கொடுத்துவிட்டு, ஒன்னுமே நடக்கல, மும்தாஜ் ஏன் இப்படி ரியாக்ட் பண்றாங்க என்று பல்டி அடித்தார் ஐஸ்வர்யா. அப்போ அந்த முத்தமெல்லாம் பொய்யா.. ஐஸு..

மும்தாஜுடம் தொடங்கி, ஐஸ்வர்யாவிடமிருந்து ஷாரிக்கிடம் சென்று கடைசியாக இந்த விஷயம் மகத் காதுகளுக்கு சென்றது.
மகத்துக்கு தான் ஒன்னு கிடைச்சா போதுமே, ஹீரோயிசத்தை காட்ட  தொடங்கினார். பாவம் அந்த அறையில் தான் யாரும் இல்லை. போதாக்குறைக்கு பயப்படாத மச்சான். பயந்தா ஏறி மிதிச்சிட்டு போவாங்க என்று ஷாரிக்குக்கு பன்ச் பன்ச்சாக அறிவுரை கூறினார். இவர் தான் பயந்து ஒதுங்கும் சென்றாயனை ஏறி மிதித்து செல்வது..

இனி கிட்சன் சண்டை என தனிப்பகுதியை ஒதுக்கி கூட தினமும் எழுதாலம். தினம் தினம் சமயலறை சண்டைக்கள் மட்டும் தொடர்கதையாக இருக்கிறது. நேற்றைய கிட்சன் சண்டையின் போது, பாலாஜி பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருந்தார். அனைத்தும் கழுவிமுடிக்கும் நேரத்தில் நீங்க ஏன் கழுவிறீங்க அது தான் டீம் இருக்கே என்றார் வைஷ்ணவி. இன்னும் நாளு நாள் கழித்து சொன்னால் என்ன என்பது போல பார்தார் பாலாஜி. மும்தாஜும் ஏன் கழுவி வெச்சீங்க என்று எசப்பாட்டு பாட காண்டான டேனியும் பாலாஜியும் கத்த தொடங்கினர். அங்கு யார் பக்கம் நியாயம் என்று பேசுவதில் எந்த நியாயமும் இல்லை. அவர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்றார் போல சரி தவறுகளை மாற்றிக்கொள்கின்றனர்.

மகத் தனக்கு உடம்பு சரி இல்லை என தலைவியிடம் கூறிவிட்டு தூங்க சென்றார். கண்ணை மூடியதும் நாய் குரைத்தது.உடனே எதிரணி டேங்கில் இருந்து நீரை எடுத்துக்கொள்வதாக கூறினர். தூக்க காண்டில் கத்த ஆரம்பித்தார். அவர் பேசுவதை கேட்பதற்கு பதிலாக கொஞ்ச நேரம் தூங்க விட்டிருக்கலாம் என  பிக்பாஸே நினைத்திருக்க கூடும்.

டாஸ்கில் இடைவேளையில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஜனனி அணியினர் வெற்றி பெற்றனர். ஒவ்வொரு முறையும் டாஸ்க்கின் வெற்றியாளர்களை அறிவிக்கும் போதும் வைஷ்ணவியின் பாடி லேங்குவேஜில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. கேப்டன் என்றால் விரப்பாக தான் இருக்க வேண்டும் என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள் போல. பாகுபலி தமன்னா போல தேவையில்லாமல் ஷோல்டரை தூக்கி கொண்டு சுற்றினார்.

பாலாஜி ஹேப்பி பேர்த் டே என்று கூறிவிட்டதாக எதிரணி புகார் அளித்தனர். (ஓ.. ஹேப்பி பேர்த் டே ஆங்கிலமாம்..)உடனே பாலாஜியை அமைதியாக இருக்கும் படி திட்டினார் நித்யா. இதுவே பழைய பாலாஜியா இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா..

மீண்டும் கிட்சன் பிரச்னை நடந்தது. இந்த முறை டேனி அதிகமாகவே கத்திவிட்டார். உடனே டேனி உத்தரவிடுவது போல பேசுவதாக மும்தாஜ் கூறினார். மும்தாஜ் மீது மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வைக்கும் குற்றச்சாட்டு இது. மேலும் பொன்னம்பலமும் டேனியை அழைத்து, இனிமே பார்த்து பேசு தம்பி என எச்சரிக்கும் விதத்தில் பேசினார்.

இதுப்பற்றி சென்றாயனும் டேனியும் பேசிக்கொண்டனர். மகத்துக்குலாம் நடிப்பு இல்லனா கூட பிரச்னை இல்ல.. நமக்கு இது மட்டும் தான் தெரியும் ஜாக்கிரதையா இருந்துக்கோ மச்சான் என்று தெளிவாக பேசினார் சென்றாயன்.

அடுத்த இடைவேளை டாஸ்க்கில் பானையை தலையில் தூக்கி கொண்டு பாதையை கடக்க வேண்டும். இந்த டாஸ்கில் மும்தாஜ் தவிர வேறு யாரும் அந்த டாஸ்க்கை சரியாக செய்யவில்லை. என அந்த அணி வெற்றி பெற்றது.

3 நாட்களாக நம் பொறுமையை சோதித்த இந்த டாஸ்க் ஒரு வழியாக முடிவு பெற்றது. டாஸ்கின் முடிவை மும்தாஜ் படித்தார். தமிழை உடைத்து உடைத்து அக்மார்க் ஹீரோயின் மொழியில் பேசினார் மும்தாஜ். அப்போது தனது சீக்ரட் டாஸ்க் பற்றி படிக்கும் போது மற்றவர்களிடம் இருந்து பெரியளவில் ரியாக்ஷனை எதிர்பார்த்திருப்பார். ஆனால் அவர்கள் அனைவரும் சாப்பிட்டில் பிசியாக இருந்ததால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பின் போட்டியாளர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திட்டமிட்டு செயல்படுபவர்கள் பற்றி பெயர் கூறாமல் பேச வேண்டும் என்று பிக்பாஸிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது.

அதன் படி ஒவ்வொருவரும் வந்து பேசினர். அதில் பலர் மும்தாஜ், டேனி, ஐஸ்வர்யா, ரித்விகா பற்றி பேசினர் என்பது தெரிந்தது. அவர்கள் பேசியதை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் தெளிவாக இருப்பது போல தான் இருந்தது.

கடைசியாக ஸ்டோர் ரூம் பெல் அடிக்க வீட்டின் தலைவி பதறி அடித்துக்கொண்டு ஓடிப்போய் கதவை திறந்தார். அங்கு மும்தாஜ்க்காக பிறந்த நாள் கேக் அனுப்பப்பட்டு இருந்தது. மும்தாஜ் பிறந்தநாள் என்பதையும் தாண்டி கேக்கை பார்த்தும் உற்சாகமடைந்தனர் போட்டியாளர்கள்.

அவர்கள் முழுதாக கேக்கை சாப்பிட்டு முடிப்பதற்குள் விளக்குகள் அணைக்கப்பட்டு பிண்ணனி குரல் பேசியது. மும்தாஜை போட்டியாளர்கள் திட்டவும் செய்கிறார்கள், பாராட்டவும் செய்கிறார்கள் என்று அந்த குரல் பேசியதோடு நிகழ்ச்சி முடிந்தது.

அதேதான் நாங்களும் கேட்கிறோம்.. இது பிக்பாஸ் வீடா இல்ல 9 மணி சீரியலா?

Advertisement:
[X] Close