#Biggboss Day 25: பொண்ணு மேல கைய வெச்சா என்கவுண்டர் தான்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 10:35 am

what-happened-in-biggboss-day-25

கொஞ்சம் வாக்குவாதகங்களுக்கு வழிவகுத்தாலும் அந்த டாஸ்க் இரண்டு நாட்களுக்கு இழுத்து கடுப்பேத்துகிறார் பிக்பாஸ். அது போல பல பிரச்னைகளுக்கு வழிவகுத்த திட்டம் போட்டு திருடுற கூட்டம் டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது.

ரம்யா இந்த டாஸ்க்கை சரியாக விளையாடாததால் ரம்யாவின் தலைவி பொறுப்பு பறிக்கப்பட்டது குறித்து நித்யா பேசிக்கொண்டு இருந்தார். என்ன இருந்தாலும் கிவ்அப் பண்ணிருக்க கூடாது என அறிவுரைகள் கூறிக்கொண்டு இருந்தார். அவர் தான் தற்போது தலைவராம். இவர்கள் இப்படி சீரியசாக பேசிக்கொண்டு இருக்க மறுபக்கம், திருடர்கள் தங்கள் வேலையை செய்து கொண்டு இருந்தனர்.

25ம்நாள் காலை டசக்கு டசக்கு பாடலோடு பிக்பாஸ் வீட்டில் விடிந்தது. டாஸ்க்கால் கடுப்பான ஜனனி நடனமாட வில்லை. டேனி தன்னுடைய அடுத்தடுத்த பிளான்களை கேமரா முன் கூறிக்கொண்டு இருந்தார். அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பே அன்றைய டாஸ்க் தொடங்கியது. திருடர்கள் வேலையை தொடங்கினர்.

போலீசார் வைத்திருந்த் கரும்பலகையையும், வெள்ளை காகிதத்தையும்திருடிக்கொண்டு திட்டம் தீட்டினார் திருடன் டேனி. அந்த பேப்பரை காசுக் கொடுத்த வாங்கி தங்கள் உறவுகளுக்கு செய்தி எழுதி தருலாம் என பிக்பாஸ் போல கூறினார். 25 நாட்களில் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

தலைமை அதிகாரி மகத் தான் என்றாலும் மும்தாஜ் தேவையில்லாமல் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என பொதுமக்கள் மகத்திடம் புகார் அளித்துக்கொண்டு இருந்தனர். அந்த நிகழ்ச்சி தொடங்கியில் இருந்தே மும்தாஜ் அப்படி தான் இருக்கிறார். உடனே அது உண்மை தான் கூறும் படி சென்றாயனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார் மும்தாஜ். தலையில் பொடுகு அதிகமா இருக்கு எலுமிச்சை வாங்கி தேய்க்கணும் 10 ரூபாய் கொடுங்க என மும்தாஜிடம் கேட்டார் சென்றாயன். 10 ரூபாய் என்பது 10 கோடி மாறி நான் தர மாட்டேன் என்றார். அவங்களுக்கான தேவைக்காக மட்டும் 20 ரூபாய் செலவு பண்ணாங்க என்ற புகார்கள் எழ வாக்குவாதம் தொடங்கியது.

இதில் போலீஸ்காரர்கள் மைக் அணியவில்லை, ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என டாஸ்க்கில் குறியாக இருந்தனர் பொது மக்கள்.
இந்த டாஸ்கில் ஒரே ஒரு கேரக்டர் ஆடை தான் கொடுத்திருக்கிறார்கள் போல. அதே ஆடையை இரண்டாவது நாள் அணிய மாட்டேன் என்றார் மும்தாஜ். மற்றவர்கள் அப்படி தான் செய்கிறார்கள் நீங்களும் செய்ய வேண்டும் என தலைவி நித்யா பேசியும் ஒன்றும் ஆகல்லை. போலீஸ் உடையை அணியாமல் அரபு நாட்டு அதிகாரி போல தயாராகி வந்தார்.

போலீசாரிடம் அதிகமாக காசு வாங்குவதற்காக டைனிங் டேபிளில் குப்பைகளை போட்டார் ரித்விகா. தெளிவாக விளையாடுகிறார். டேபிளை சுத்தம் செய்ய வேண்டும் என்று போலீஸ் கூறினால் அதற்கும் சேர்த்து காசு வாங்கி கொள்கிறார்கள்.

பாலாஜியின் கண்ணாடியை திருடிக்கொண்டதால் தலைவலி வந்து விட்டதாக மகத்திடம் புகார் கொடுத்தார் நித்யா. நடுவில் இருவரும் சேர்ந்து பெர்ஃபார்ம் செய்கிறார்கள். ஆனால், திருடர்கள் காசு கொடுத்தால் தான் கண்ணாடியை தருவோம் என உறுதியாக இருந்தனர். உடனே பிக்பாஸிடம் ஜோடியாக சென்று புகார் அளித்தனர்.

தன்னை திருடர்கள் டீசிங் செய்வதாக மகத்திடம் புகார் அளித்தார் வைஷ்ணவி. நம்ம சூப்பர் போலீஸ், திருடர்கள் அப்படி தான் செய்வார்கள் என்று கூறிவட்டு சென்றார். இதே போல போலீசில் புகார் அளிக்க வந்த ரித்விகாவை அழகா இருக்கீங்க என்றார் சென்றாயன். இதெல்லாம் போட்டியாளர்களாக  செய்கிறார்களா அல்லது பிக்பாஸ் உடைய கட்டளையா என்ற கேள்வி எழாமல் இல்லை.

அழகாய் இருக்கிறாய் என்று கூறிய குற்றத்திற்காக சென்றாயனை சிறையில் அடைத்தார் மகத். அப்போதும் சென்றாயன் ஜனனி கையை பிடித்து இழுக்க.. பொண்ணுங்க கையை பிடித்தால் என்கவுண்டர் தான் என வசனம் பேசினர். மகத்தெல்லாம் அட்வைஸ் பண்ணுவது போல நடந்து கொள்கிறோமே என சென்றாயன் யோசித்திருக்க கூடும். 

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சென்றாயன் டேனியிடம் சீரியசாக பேசிக்கொண்டு இருந்தார். அனந்த் தனிப்பட்ட காரணத்திற்காக தான் பொன்னம்பலத்தை சிறையில் அடைத்தார் என சென்றாயன் கூறினார். எதுவா வேணா இருக்கட்டும் உடம்பு சரியில்ல.. பெரிய மனுஷன்னு சொல்லிட்டு திரியுறவங்க தான் பஸ்ல பொண்ணுங்களுக்கு டார்ச்சல் கொடுக்குறாங்க. அதையெல்லாம் ஒரு காரணமாக வைத்து பேசக்கூடாது என்றார் டேனி. அதற்கு பதில் அளிக்க தெரியாமல் “நீ கரெக்டா இருக்க.. மத்தவங்க பிரச்னைக்கு போகாத” என்றார் சென்றாயன். டேனியும் அதனை ஏற்றுக்கொண்டார். அந்த உரையாடலின் போது, "இந்த வீட்டில் நான் ஏன் அசிங்கமா பேச மாட்றேன் தெரியுமா, நம்ம அம்மா அப்பா மாதிரி  நிறைய பேர் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அப்படி இருக்க நாம அப்படி  பேசக்கூடாது" என்றார். 

பிக்பாஸ் வீட்டிலும் மாலை ஆனதும் அலாரம் வைத்தது போல மழை பெய்தது. திருடர் தங்களது பேபி பேபி பாடலுக்கு ஆடினர். இந்தடாஸ்க்கை முழுமையாக அனுபவித்து கொண்டு இருப்பது அவர்கள் மட்டும் தான். பின் டாஸ்க் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும் பஞ்சாயத்துக் கூட்டப்படுவதாகவும் அறித்தார் பிக்பாஸ். அதன் தலைவி ஜனனி. .வீட்டில் இருக்கும் 3 தரப்பினரிடம் விசாரணை நடத்தி மகத்தை சிறையில் அடைத்தனர்.

மகத்துக்கு இருக்கும் ஆதரவு அப்போது தான் தெரிந்தது. அதெல்லாம் நடிப்பு என வெளியே திருடர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மகத் உடனே நல்லவர் ஆனார். தன்னை சனிக்கிழமைவரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்தார். நாங்களும் அதையே கூறிக்கொள்கிறோம்.

 

Advertisement:
[X] Close