வசூலில் பின்னும் ‘அவெஞ்சர்ஸ்' திரைப்படம்!  

  Bala   | Last Modified : 13 Jun, 2018 12:08 pm

avengers-infinity-war-box-office-officially-passes-2-billion

ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம், உலக அளவில் அதிரடி வசூல் செய்து, பின்னிப் பெடலெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்வல் ஸ்டூடியோஸ் சார்பில் பல சூப்பர் ஹீரோக்கள் நடித்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பல சூப்பர் ஹீரோக்களும், தனோஸ் என்ற பயங்கரமான வில்லனும் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகி, திரையரங்குளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை பின்னிப் பெடலெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போதைய நிலவரத்தின் படி, இந்தப் படம் 2 பில்லியன் டாலர்கள், அதாவது; இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 13, 5,17 கோடிகளைக் குவித்திருக்கிறது! 

உலகளவில் அதிகம் வசூலை குவித்த படங்களின் பட்டியலில், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ திரைப்படம், நான்காவது இடத்தில் உள்ளது. ஜேம்ஸ் கேமரானின் ’அவதார்’ (2.78 பில்லியன் டாலர்) மற்றும் ’டைட்டானிக்’ (2.18 பில்லியன் டாலர்) படங்கள், முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளன. ’ஸ்டார் வார்ஸ் த ஃபோர்ஸ் அவாகென்ஸ்’ படம் வசூலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் படங்களின் வசூல் சாதனைகளை ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

..
Advertisement:
[X] Close