விஜய் 62 - ல் இதைத்தான் பேசப் போகிறார் விஜய்

  Shalini Chandra Sekar   | Last Modified : 13 Mar, 2018 01:21 pm


மெர்சல் படத்திற்குப் பிறகு விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜயும் - முருகதாஸும் இணையும் மூன்றாவது படம். இவர்கள் இருவரும் இணையும் போது பொதுவாகவே எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு இந்தப் படமும் விதி விலக்கல்ல. 

தவிர, சமீபமாக தன் படங்களில் நிறைய சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார் விஜய். குறிப்பாக கடைசியாக வந்த மெர்சல் படத்தில் அவர் பேசிய வசனம் ரசிகர்களிடம் மிகவும் வைரல் ஆனது. அதோடு குறிப்பிட்ட அரசியல் கட்சியினரால் சர்ச்சைக்குள்ளாக்கவும் பட்டது. 

இந்த நிலையில் விஜய் தனது 62வது படத்திலும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச இருக்கிறாராம். அதில் தமிழக அரசியல், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னை உள்பட பல விஷயங்கள் அலசப்படுகிறதாம். இது சம்பந்தமாக சில வசனங்களை முருகதாஸ் வைக்க, விஜயும் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்து விட்டாராம். 

..
Advertisement:
[X] Close