புது முகங்களுக்கு கை கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரன்!

  பால பாரதி   | Last Modified : 19 May, 2018 06:54 pm


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், புது முகங்கள் நடிக்கும் 'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன்  போஸ்டரை வெளியிட்டார்.

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி தயாரிக்கும் படம் 'சந்தோஷத்தில் கலவரம் '. இப்படத்தில் புதுமுகங்கள் நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத்  , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்‌ஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் பிரபல வில்லன் நடிகர் ரவி மரியா முக்கியமான ரோலில் நடித்துள்ளார். 

 பல்வேறு விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கிய கிராந்தி பிரசாத் இப்படத்தை இயக்குகிறார்.

ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே இந்தப் படத்தின் கதை. 

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார். 

..
Advertisement:
[X] Close