சினிமாவில் 10 ஆண்டுகளைக் கடந்த மதன் கார்க்கி!

Last Modified : 24 May, 2018 01:56 pm


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்ற சொல்லாடல் நம்மூரில் உண்டு. இது கவிஞர் மதன்கார்க்கிக்கு மிகவும் பொருந்தும். கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற கார்க்கி, 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தார். பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது தான் பாடலாசிரியராக அறிமுகமானார். 

பாடலாசிரியர், வசனகர்த்தா என படு பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கார்க்கி. தோடு மெல்லினம் என்ற கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரும் இவர் தான். தற்போது சினிமாவில் பத்து வருடத்தைக் கடந்திருக்கிறார். 

“அண்ணா பல்கலை கழக விளையாட்டு திடலில் அமர்ந்து

என் முதல் பாடலான எந்திரனில் இடம் பெற்ற 'இரும்பிலே ஓர் இருதயம்' பாடலை எழுதினேன். உங்களின் அன்பு, ஆசி, வழிகாட்டுதலால் தான் இது நிகழ்ந்தது. அனைவருக்கும் நன்றி” என இது குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்போது வரை தான் 250 படங்களில் 750 பாடல்கள் எழுதியிருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார் மதன் கார்க்கி. 

..
Advertisement:
[X] Close