துப்பாக்கிச்சூடு நிலை குலைய வைத்துள்ளது - தனுஷ் உருக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 May, 2018 04:49 pm


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் கடந்த 3 நாட்களாக தீவிரமடைந்தது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி கொண்டு தாக்கியும், புகைக்குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கட்டுப்படுத்தி வருகின்றனர். 3 நாட்களாக கடைகள் திறக்கப்படாமல், பேருந்துகள் இயங்காமல், தூத்துக்குடியே துயரத்தில் உள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தனுஷ் நற்பணி மன்றத்தை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு தனுஷ் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “துப்பாக்கிச்சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலைகுலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். மிகுந்த வேதனையுடன், தம்பி ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான ‘த ஃபஹிர்’ படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

..
Advertisement:
[X] Close