ரிலீஸ் தள்ளிப் போகும் பவர் ஸ்டார் படம்!

  பால பாரதி   | Last Modified : 25 May, 2018 09:37 am

 

பவர் ஸ்டார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ திரைப்படம், தியேட்டர் கிடைக்காத்தால் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரஜாக் இயக்கியுள்ள படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இந்தப் படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர். 


பவர் ஸ்டார் சீனிவாசன் முதலமைச்சராக நடித்திருக்கிறார். மேலும் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் ஆர்.வி.உதயகுமார் திருடன்களாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசி தலைவனாகவும் நடித்திருக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் மே 25 (இன்று) திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை! 

அதனால், ’கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

..
Advertisement:
[X] Close