BREAKING
  • உலக கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா
  • ஸ்டெர்லைட் ஆலை கந்த அமில கிடங்கில் கசிவு - கலெக்டர் தகவல்
  • மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 15000 கன அடியாக அதிகரிப்பு
  • மன்சூர் அலிகான் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு
  • ஜூலை 15 முதல் நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஹீரோயின் ஆனார் எ.வீ.மாப்பிள்ளை அபர்ணதி!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 12:31 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, ஜி.வி.பிராகஷ் படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். 

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போவது யார்? என்று தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபர்ணதி. மற்ற போட்டியாளர்களை விடவும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.  அந்த போட்டியில் யாரையும் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பலரையும் கவர்ந்த அபர்ணதி தற்போது நாயகியாக அறிமுகமாக உள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கும் படத்தில் அபர்ணதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'செம' படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

அது மட்டும் அல்லாமல் 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், ரெட்டைக் கொம்பு, கருப்பர் நகரம், பெயரிடப் படாத ஆதிக் ரவிச்சந்திரனின் படம் என பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சுதா கொங்கரா - சூர்யா இணையும் படத்திற்கும் இசையமைக்கும் ஜி.வி செம பிசியாக இருக்கிறார். 

..
Advertisement:
[X] Close