வைரலாகும் சமந்தாவின் ஜிம் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 01:31 pm

நடிகை சமந்தா ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கலக்கி வருகிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. 

சினிமா மட்டும் இன்றி சமூக வலைதளங்களிலும் சமந்தா தான் ஹிட். தினம் தினம் பல இன்ஸ்டாகிராம் அப்டேட்ஸ்களை பதிவிடுபவர் சமந்தா. அந்த வகையில் ஜிம்மில் புல்அப் செய்யும் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது. 

மேலும் அந்த வீடியோவோடு, தான் இந்த உடற்பயிற்சியை செய்யாமல் இருக்க பல முறை ஜிம் டிரைனரிடம் பொய்கள் சொல்லி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்று அவரது கணவர் நாகசைதன்யா அவரை பிட்னஸ் சேலஞ்ச் செய்திருந்தார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சமந்தா, நடிகை ரகுல் பிரித் சிங்கை சேலஞ்ச் செய்துள்ளார். 


..
Advertisement:
[X] Close