நடிகர் ஆரி ஆசையை நிறைவேற்றிய தமிழக அரசு!

  பால பாரதி   | Last Modified : 07 Jun, 2018 06:22 pm

actor-aari-thanks-to-government

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்திருக்கும் தமிழக அரசுக்கு  நடிகர் ஆரி, தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

’ரெட்டை சுழி’,’மாயா’,’நாகேஷ் திரையரங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நடிகர் ஆரி, ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்ற சமூகப் பிரச்னைகளிலும்அக்கறை காட்டி வருபவர். மேலும், பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது எனப் போராடி வருகிறார். அத்துடன் தனது பட விழாக்கள் மற்றும் தான் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார். 

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது ஆசையை நிறைவேற்றியுள்ள தமிழக அரசுக்கும், இந்த உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும்  நடிகர் ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

..
Advertisement:
[X] Close