காலா படத்தின் 'கண்ணம்மா' பாடல் வீடியோ

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 08:48 am

dhanush-released-kannamma-youtube-video

'காலா' படத்தில் அனைவரையும் கவர்ந்த 'கண்ணம்மா' பாடல் வீடியோவை தனுஷ் வெளியிட்டார். 

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே, இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணம்மா’ பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியாகி உள்ளது.  இந்தப் பாடல் வீடியோ தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ரஜினியின் சண்டை காட்சிகள், மாஸ் காட்சிகளை தாண்டியும் பலருக்கும் அவரது காதல் காட்சிகள் பிடிக்கும். அந்த வகையில் இந்த பாடலின் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. 

பாடலை பார்க்க : https://youtu.be/4BD0jvKhFPk

Advertisement:
[X] Close