பாழடைந்த வீட்டில் டூயட் பாடிய விமல் - ஓவியா!

  பால பாரதி   | Last Modified : 13 Jun, 2018 11:14 am

kalavani-2-is-in-final-stage

'களவாணி 2’ படத்துக்காக விமல் - ஓவியா இருவரும் பாழடைந்த வீட்டில் டூயட் பாடியுள்ளனர்.  

சற்குணம் இயக்கத்தில், விமல் - ஓவியா ஜோடியாக நடித்த ‘களவாணி' படத்தின் வெற்றிக் கூட்டணி, ’களவாணி 2' படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சூரி மட்டும் மிஸ்ஸிங்! அவருக்குப் பதிலாக, ஆர்.ஜே.விக்னேஷ், நாயகன் விமலின் நண்பராக நடித்திருக்கிறார்.

’களவாணி 2’ படத்துக்காக சமீபத்தில், 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில்  படமாக்கப்பட்டது. பாடலாசிரியர் மணி அமுதவன் எழுதிய இந்தப் பாடலுக்காக, கலை இயக்குனர் குணசேகரன் ஒரு பாழடைந்த  வீடு ஒன்றை உருவாக்கி தர, அதில் விமல் -ஒவியா இருவரும் டூயட் பாட, அந்தக் காட்சியை படமாக்கினார் இயக்குநர் சற்குணம்.

தஞ்சாவூர் பகுதியை சுற்றி நடந்து வந்த ’களவாணி 2’ படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.மொத்தப் படப்பிடிப்பும் ஜூன் 22ம் தேதி முடிய இருக்கிறது என இயக்குநர் சற்குணம் சொன்னார். 
 

..
Advertisement:
[X] Close