ஜூன் 27ல் இமைக்கா நொடிகள் டிரைலர், இசை

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 10:33 am

imaikka-nodigal-trailer-to-be-released-on-june-27th

நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ட்ரெய்லர் ஜூன் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

டிமான்ட்டி காலனி படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடைய கணவராக கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதர்வா - ராஷி கண்ணா மற்றொரு ஜோடியாக நடித்திருக்கின்றனர். இயக்குநரும் நடிகருமான அனுராக் கஷ்யப், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு,  ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீநிவாசன் எடிட் செய்துள்ளார். கேமியோ ஃபிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆன நிலையில், வருகிற 27ம் தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement:
[X] Close